சீனாவில் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் - நாய் பங்கேற்ற சிங்க நடனம், குரங்குகளின் சாகசங்களைக் கண்டு பார்வையாளர்கள் வியப்பு

Feb 4 2016 7:50AM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் பிறக்கும் புத்தாண்டை குரங்கு ஆண்டாக கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, குரங்குகளைக்கொண்டு வித்தைகளை காட்டும் தொழில் பிரபலமடைந்துள்ளது.

சீனாவில் புத்தாண்டு பிறப்பைக் கொண்டாட உலக முழுவதிலிருந்து சீனர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு வரத்தொடங்கியுள்ளனர். சீனா புதிய ஆண்டை குரங்கு ஆண்டாக அறிவித்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் வரும் 8ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் சீனாவின் மத்திய Henan மாகாணப்பகுதியான Baowan கிராமத்தில் உள்ள கூத்தாடிகள் குரங்குகளுக்கு பல்வேறு சாகச பயிற்சிகளை அளித்து வருகின்றனர். சைக்கிள் ஓட்டுவது, இரண்டு கம்பிகளில் நடப்பது, உருளைக்கட்டையின் மீது நின்று கத்திகளை பிடிப்பது போன்ற குரங்குகளின் சாகச நிகழ்ச்சிகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

இதிடையே தாய்லாந்தில் சீனப்புத்தாண்டை வரவேற்கும் வகையில் இரண்டு வயது நிரம்பிய zipplaw என்ற நாய் ஒன்றுக்கு இளைஞர் ஒருவர் சிங்க நடன பயிற்சி அளித்து வருகின்றார். இந்த வீடியோ காட்சியை இணைய தளம்மூலம் 3 மில்லியன் மக்கள் கண்டுகளித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தோனேசியாவில் தெற்கு ஜாவா பகுதியில் சீனப்புத்தாண்டை வரவேற்கும் வகையில் சீனர்கள் அல்லாத 168 பள்ளிக்குழந்தைகளுக்கு சிங்க நடனப்பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00