கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விளக்குகளுடன் நிறுவப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரம் : ஆஸ்திரேலியாவில் புதிய கின்னஸ் சாதனை

Nov 28 2015 11:04AM
எழுத்தின் அளவு: அ + அ -

கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில், ஆஸ்திரேலியாவின் Canberra நகரில், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஒளிசிந்தும் விளக்குகளுடன் நிறுவப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரம், புதிய கின்னஸ் சாதனைப் படைத்துள்ளது.

யேசுநாதர் அவதரித்த கிறிஸ்துமஸ் திருநாள் கொண்டாட்டத்திற்கு இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில், அதனை வரவேற்க உலக நாடுகள் தயாராகி வருகின்றன. ஆஸ்திரேலியாவின் Canberra நகர மையத்தில் 22 மீட்டர் உயர கிறிஸ்துமஸ் மரம் நிறுவப்பட்டு, 5 லட்சத்து 18 ஆயிரத்து 838 ஒளிரும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த கிறிஸ்துமஸ் மரத்தின் உச்சியில், 12 ஆயிரம் ஒளிசிந்தும் பல்புகளை உள்ளடக்கிய சுமார் ஒன்றரை மீட்டர் அளவிலான நட்சத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. கண்களை பறிக்கும் வகையில் ஒளிவீசும் இந்த கிறிஸ்துமஸ் மரத்தை, பொதுமக்கள் கண்டுகளிக்கின்றனர்.

ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் 3 லட்சத்து, 74 ஆயிரத்து 280 மின் விளக்குகள் பொருத்தப்பட்ட 36 மீட்டர் உயரமுள்ள கிறிஸ்துமஸ் மரம்தான் இதுவரை கின்னஸ் சாதனையாக இருந்துவந்தது. இதனை, இப்போது ஆஸ்திரேலியாவில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரம் முறியடித்து, புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00