ரஷ்ய போர்விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக துருக்கி வருத்தம் தெரிவித்தபோதிலும் ஏற்க மறுக்கும் ரஷ்யா : உலக நாடுகளின் முன்பாக துருக்கி பொதுமன்னிப்பு கேட்க வலியுறுத்தல்

Nov 29 2015 11:09AM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்ய போர்விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக துருக்கி வருத்தம் தெரிவித்துள்ள போதிலும் அதனை ஏற்க மறுத்த ரஷ்யா, சர்வதேச நாடுகளின் முன் துருக்கி பொதுமன்னிப்பு கேட்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

சிரியாவில் உள்ள ஐ.எஸ். ராணுவ நிலைகளின் மீது தாக்குதல் நடத்துவதற்காக, ரஷ்யாவில் இருந்து சென்ற F-16 ரக போர் விமானத்தை கடந்த 24-ம் தேதி, துருக்கி ராணுவத்தினர் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தினர். தங்களது வான் எல்லையில் பறந்ததால்தான் ரஷ்ய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என ஆரம்பத்தில் துருக்கி விளக்கம் அளித்தது. ஆனால், அமெரிக்காவின் நட்பு நாடாக நேட்டோ அமைப்பில் துருக்கி இணைந்துள்ளதால்தான், தங்களது விமானத்தை சுட்டுவீழ்த்தியது என ரஷ்யா குற்றம்சாட்டியது.

அதனைத் தொடர்ந்து, துருக்கி எல்லையில் உடனடியாக ஏவுகணை அழிப்பு மையத்தை ரஷ்யா நிறுவியது. அதனையடுத்து, துருக்கி மீது பொருளாதார தடை விதித்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று, தலைநகர் அங்காராவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் உரையாற்றிய துருக்கி அதிபர் Erdogan, ரஷ்ய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்திற்காக தனது வருத்தத்தைத் தெரிவித்தார். எனினும், அதனை ஏற்காத ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சர்வதேச நாடுகளின் முன் துருக்கி பொதுமன்னிப்பு கேட்கவேண்டும் என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00