ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தியது ஃபிரான்ஸ் - தாக்குதல் நடத்தப்பட்ட பாரீஸ் நகரில் வெடிகுண்டு பெல்ட் கண்டுபிடிக்கப்பட்டதால் மீண்டும் பரபரப்பு

Nov 24 2015 8:33AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஆதிக்கமுள்ள இடங்களில் விமானம் தாங்கி கப்பல்கள் மூலம் ஃபிரான்ஸ் வான்வெளி தாக்குதல்களை தொடங்கியுள்ளது.

ஃபிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 129 அப்பாவி மக்கள் பலியானதை அடுத்து, ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை முற்றிலுமாக ஒழிக்க அந்நாட்டு அதிபர் ஹாலண்டே வலியுறுத்தினார். இதனையடுத்து, சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் முகாம்கள் மீது ஃபிரான்ஸ் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.

மேலும், ஐ.எஸ். தீவிரவாதிகள் மீதான தாக்குதலை இரட்டிப்பாக்க அனுமதிக்கவேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒன்றான ஃபிரான்ஸ் 3 நாட்களுக்கு முன்பு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது. தீர்மானம் தாக்கல் செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் அனைத்து உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஆதிக்கமுள்ள இடங்களில் ஃபிரான்ஸ் வான்வெளி தாக்குதல்களை தொடங்கியுள்ளது. விமானம் தாங்கி கப்பல்கள் மூலம் இந்த தொடர் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. ஐ.எஸ் தீவிரவாதிகள் மீதான தாக்குதலில் ரஷ்யாவும், ஃபிரான்சும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பாரீஸ் நகரின் தெற்கு பகுதியில் வெடிகுண்டுகளை இணைக்கும் பெல்ட் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், Montrouge நகரில் குப்பை தொட்டி ஒன்றில் இந்த பெல்ட் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00