ஐ.எஸ். உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளை வேரோடு அழிக்கப்போவதாக APEC நாடுகள் அறிவிப்பு : தீவிரவாத அமைப்புகள் குறித்த தகவல்களை பகிர்ந்துகொள்ள முடிவு

Nov 21 2015 11:26AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐ.எஸ். உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளை வேரோடு அழிக்கப்போவதாக APEC நாடுகள் அறிவித்துள்ளன. தீவிரவாத அமைப்புகள் குறித்து தம்மிடம் உள்ள தகவல்களை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டு, ஒன்றுபட்ட நடவடிக்கையில் ஈடுபடுவது என்றும் அந்நாடுகள் முடிவு எடுத்துள்ளன.

ஆசிய-ஆப்ரிக்க நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஒபாமா, சீன அதிபர் Xi Jin ping, ஜப்பான் பிரதமர் Shinzo Abe உள்ளிட்ட 21 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

துவக்க நிகழ்ச்சியின்போது, மாநாட்டு அரங்கிற்கு வெளியே திரண்ட நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள், உலக நாடுகளின் பொருளாதார விவகாரங்களில் தலையிடும் அமெரிக்காவின் போக்கை கண்டிக்கும் வகையில், அமெரிக்க கழுகின் உருவபொம்மையை தீயிட்டு கொளுத்தினர். அமெரிக்காவின் காலனியாக செயல்படும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட உறுப்புநாடுகளுக்கு எதிராகவும் கண்டனக் குரல் எழுப்பினர்.

ஆசிய-ஆப்ரிக்க நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில், தீவிரவாதிகளின் ரஷ்ய விமான தகர்ப்பு, பாரிஸ் நகர தாக்குதல், மாலி ஹோட்டல் துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இதனையடுத்து, ஐ.எஸ். உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளை வேரோடு அழிக்க அனைத்து நாடுகளும் இணைந்து செயல்படுவதென கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00