ஆஃப்ரிக்க நாடான மாலி தலைநகரில் உள்ள நட்சத்திர விடுதியில், திடீரென புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்திய தீவிரவாதிகள் - பிணைக் கைதிகளாக பிடித்துச்சென்ற இந்தியர்கள் உட்பட 143 பேரை மீட்டது ஃபிரான்ஸ் அதிரடிப்படை

Nov 21 2015 6:29AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஃப்ரிக்காவின் மாலி நாட்டு தலைநகர் Bamako-வில், நட்சத்திர விடுதியில், தீவிரவாதிகள் திடீரென புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 27 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதால், அங்கு பதற்றம் நிலவுகிறது. தீவிரவாதிகள் 2 பேரும் கொல்லப்பட்டனர். பிணைக்கைதிகளாக தீவிரவாதிகள் பிடித்து வைத்திருந்த 20 இந்தியர்கள் உள்ளிட்ட 143 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Bamako-வில் உள்ள ஆடம்பர நட்சத்திர விடுதி ஒன்றில், நேற்று அதிரடியாக புகுந்த ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள், விடுதி ஊழியர்கள் மற்றும் 20 இந்தியர்கள் உள்ளிட்ட விடுதியில் தங்கியிருந்த 170 பேரை துப்பாக்கி முனையில் பிணைக்கைதிகளாக சிறைபிடித்தனர். தீவிரவாதிகள் நடத்திய தீடீர் துப்பாக்கிச்சூட்டில் 27 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தகவலறிந்து, விடுதியை சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினர், தீவிரவாதிகளுடன் கடுமையான துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இருதரப்பினருக்கும் இடையே சுமார் 9 மணி நேரம் வரை நடைபெற்ற சண்டையின் முடிவில், தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் இரண்டுபேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

நட்சத்திர விடுதியில் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்துவைத்திருந்த இந்தியர்கள் உள்ளிட்ட எஞ்சிய 143 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக மாலி நாட்டு அமைச்சர் Salif Traore தெரிவித்துள்ளார். இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதை, மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் தனது டுவிட்டர் செய்தியில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இத்தாக்குதலுக்கு, அல்-கய்தா அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. வடக்கு மாலி பகுதியை ஆக்கிரமித்திருந்த தீவிரவாதிகளை சில ஆண்டுகளுக்கு முன்பு, ஃபிரான்ஸ் தலைமையிலான ராணுவத்தினர் விரட்டியடித்தனர்.

தற்போது அந்த ஹோட்டலில் தங்கியிருந்த ஃபிரான்ஸ் நாட்டினரைக் குறிவைத்தே, தீவிரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஃபிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பன்முனைத் தாக்குதல் நடத்திய ஒருவாரத்திற்குள் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00