தென்சீன கடல் விவகாரத்தில் ஜப்பான், பிலிப்பைன்ஸ் மற்றும் கொரியாவுக்கு ஆதரவாக செயல்படும் அமெரிக்கா - ஒபாமாவுக்கு சீனா கடும் கண்டனம்

Nov 20 2015 7:27AM
எழுத்தின் அளவு: அ + அ -

தென்சீன கடல் விவகாரத்தில் ஜப்பான் - பிலிப்பைன்ஸ் மற்றும் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருவதால், ஒபாமாவுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சீனா - ஜப்பான் இடையே பல தீவு கூட்டங்கள் உள்ளன. அவற்றுக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. மேலும், சீனாவின் தெற்கு கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ், கொரியா நாடுகளுக்கு சொந்தமான இடங்களையும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதனால் அந்த நாடுகளிடையே பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இதில், ஜப்பான், பிலிப்பைன்ஸ், கொரியா நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. இதனால் அமெரிக்கா - சீனா இடையே பனிப் போர் நிலவி வருகிறது. இந்நிலையில் பிலிப்பைன்ஸ் அதிபர் பெனிக்னோ அகினோ, அமெரிக்க அதிபர் ஒபாமாவை சமீபத்தில் சந்தித்து பேசினார். இதனையடுத்து, சீனா தேவைப்பட்டால் சர்ச்சைக்குரிய கடல் பகுதியில் செயற்கை தீவுகளை உருவாக்கி கொள்ளலாம் என ஒபாமா கருத்து கூறினார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சீனா, தெற்கு சீன கடல் பகுதி விவகாரத்தில் ஒபாமா தேவையில்லாமல் தலையிட வேண்டாம் என கூறியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் விளையாடுவதை ஒபாமா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அமெரிக்கா தலையீட்டால் தென்சீன கடல் பகுதி நாடுகளிடையே பதற்றம் உருவாகியுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00