ஃப்ரான்ஸில் பாதுகாப்பு சாதனங்கள் உதவியின்றி 36 மாடி கட்டடத்தின் உச்சிக்கு சென்று அலைன் ராபர்ட் சாதனை
Nov 4 2015 8:40AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஃப்ரான்ஸில், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், Alain Robert என்பவர், பாதுகாப்பு சாதனங்கள் உதவியின்றி 36 மாடி கட்டடத்தின் உச்சிக்கு சென்ற நிகழ்வு, அங்குள்ள மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
ஃப்ரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில், Spiderman என்று அழைக்கப்படும் Alain Robert என்பவர், அங்குள்ள, 36 தளங்கள் கொண்ட மிக உயர்ந்த கட்டடத்தின் மேல் ஏறிச்செல்ல முடிவு செய்தார். இதனை செயல்படுத்தும் விதமாக நேற்று அவர், எவ்வித பாதுகாப்பு சாதனங்களும் இன்றி, வெளிப்புறத்தில் ஒவ்வொரு தளமாக, அந்த மாடிக் கட்டடத்தின் உச்சிக்கு ஏறிச் சென்றார். கடும் குளிரும் மழையும் இருந்தபோதிலும் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர் நிகழ்த்திய இந்த சாதனையை, அங்குள்ள மக்கள் நேரில் கண்டு பாராட்டு தெரிவித்தனர். Alain Robert ஏற்கனவே, துபாயில் உள்ள உலகின் மிக உயர்ந்த கட்டடம் உட்பட 100-க்கும் மேற்பட்ட மிக உயர்ந்த கட்டடங்களின் உச்சிக்கு சென்று பாராட்டு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.