அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு - துனிசியாவின் தேசிய பேச்சுவார்த்தைக் குழுவுக்கு, நோபல் பரிசு வழங்கப்படுகிறது

Oct 9 2015 1:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

துனிசியாவின் தேசிய பேச்சுவார்த்தைக் குழுவுக்கு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உலகில் சிறந்து விளங்கும் விஞ்ஞானிகள் மற்றும் அறிஞர்களுக்கு, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகரில், ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 2015-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு நோபல் பரிசு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டன.

இந்நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு பற்றிய அறிவிப்பு நார்வேயின் Oslo நகரில் இன்று வெளியிடப்பட்டது. துனிசியாவில் புரட்சிக்கு பிறகு ஜனநாயகத்தை ஏற்படுத்த பாடுபட்டதற்காக துனிசியாவின் தேசிய பேச்சுவார்த்தை குழுவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துனிசியாவின் தேசிய பேச்சுவார்த்தை குழு 4 அமைப்புகளை உள்ளடக்கியதாகும். அரபு எழுச்சி தொடங்கிய துனிசியாவில், ஜனநாயக முறையில் ஆட்சி மாற்றம் ஏற்பட தேசிய பேச்சுவார்த்தை குழு முக்கிய காரணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் 12-ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும் என்றும் நோபல் தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00