செவ்வாய் கிரகத்தில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு உருவான பிரம்மாண்ட ஏரியை கண்டுபிடித்தது கியூரியாசிட்டி ஆய்வுக்கலம் - உயிரினங்கள் வாழ வாய்ப்பிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை

Oct 9 2015 11:43AM
எழுத்தின் அளவு: அ + அ -

செவ்வாய் கிரகத்தில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு உருவான 140 கிலோ மீட்டர் அகலம் கொண்ட பெரிய ஏரி ஒன்றை நாசா அனுப்பிய கியூரியாசிட்டி ஆய்வுக்கலம் படம் எடுத்து அனுப்பியுள்ளது. இதன் மூலம் அந்த கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய 3 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய கியூரியாசிட்டி ரோவர் என்ற விண்கலம், அந்த கிரகத்தின் Gale எரிமலை வாய்ப்பகுதியில் இறங்கி ஆய்வு செய்து வருகிறது. 140 கிலோ மீட்டர் அகலம் கொண்ட அப்பகுதி, பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிரம்மாண்டமான ஏரியாக இருந்திருக்கலாம் என விண்கலம் அனுப்பிய படங்களில் இருந்து தெரியவந்துள்ளது. எரிமலையின் அடிப்பகுதியில் 5 கிலோ மீட்டர் உயரத்திற்கு வண்டல் படிமம் காணப்படுகிறது. செவ்வாய் கிரகத்தின் வட பகுதியில் இருந்து வழிந்தோடிய தண்ணீர் இந்த ஏரியில் தேங்கியிருக்கலாம் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தில் ஏரி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அங்கு உயிரினங்கள் வாழ வாய்ப்பிருப்பதாகவும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இதனிடையே, புளூட்டோ கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட New Horizons என்ற விண்கலம், அந்த கிரகத்தின் சுற்றுச்சூழலையும், நீல வானத்தையும் படம்பிடித்து அனுப்பியுள்ளது. மூடுபனி துகள்கள் சாம்பல் நிறம் அல்லது சிகப்பு நிறத்தில் காணப்பட்டது. பூமிக்கு மேல தென்படும் நீல வானம் போன்ற நீல ஒளியை வெளிப்படுத்துவது தெரியவந்துள்ளது. மேலும், புளூட்டோ கிரகத்தில் பனிக்கட்டிகளாக உறை நிலையில் தண்ணீர் காணப்படுவதையும் விண்கலம் படமெடுத்து அனுப்பியுள்ளது. புளூட்டோ கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள New Horizons விண்கலம் தற்போது பூமியிலிருந்து 310 கோடி மைல் தூரத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00