பேரழிவை ஏற்படுத்தும் அணு ஆயுதங்களை ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு விற்க நடந்த முயற்சி முறியடிப்பு : அமெரிக்க உளவு நிறுவனம் தகவல்

Oct 8 2015 11:31AM
எழுத்தின் அளவு: அ + அ -

பேரழிவை ஏற்படுத்தும் அணு ஆயுதங்களை ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு விற்க நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க உளவு நிறுவனமான FBI தெரிவித்துள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவின் முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்க கூட்டுப்படையும், ரஷ்யாவும் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், ஒரே நேரத்தில் பல நகரங்களை அழிக்கும் வல்லமை கொண்ட அணு ஆயுதங்களை, கடத்தல்காரர்கள் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினருக்கு விற்க நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. பேரழிவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்படும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு செசீயம் என்ற அணு ஆயுத பொருட்களை கடத்தல்காரர்கள் விற்க முயன்றதை முறியடித்துள்ளதாக அமெரிக்க உளவு நிறுவனமான FBI தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 5 ஆண்டுகளில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு அணு ஆயுதங்களை விற்க எடுக்கப்பட்ட 4 முயற்சிகளை தடுத்துள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. அணு ஆயுதங்களின் கள்ளச் சந்தையாக இருக்கும் மால்டோவாவில் கைது செய்யப்பட்ட கடத்தல் குழுவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00