வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு - மரபணு ஆராய்ச்சியில் ஈடுபட்ட அமெரிக்கா, சுவீடன், துருக்கியைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு

Oct 8 2015 7:44AM
எழுத்தின் அளவு: அ + அ -

வேதியியலுக்கான இந்த ஆண்டின் Nobel பரிசு Sweden-யைச் சேர்ந்த Tomas Lindahl, அமெரிக்காவின் Paul Modrich, துருக்கியைச் சேர்ந்த அமெரிக்க வாழ் விஞ்ஞானி Aziz Sancar ஆகியோருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், உலக அமைதி ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் விஞ்ஞானிகள் மற்றும் அறிஞர்களுக்கு Nobel பரிசுகள் வழங்கப்படுகின்றன. ஸ்வீடன் தலைநகர் Stockholm நகரில் கடந்த 5-ம் தேதி மருத்துவத்திற்கான Nobel பரிசு அறிவிக்கப்பட்டது. யானைக்கால் வியாதி மற்றும் மலேரியா நோயை கட்டுப்படுத்துவதற்கான மருந்தை கண்டுபிடித்த அயர்லாந்தைச் சேர்ந்த William Campbell, ஜப்பானைச் சேர்ந்த Satoshi Omura, சீனாவைச் சேர்ந்த Youyou Tu ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்துக்கான Nobel பரிசு அறிவிக்கப்பட்டது.

இயற்பியல் துறையில் Neutrino எனப்படும் மிகமிக நுண்ணிய துகள்களின் செயல்பாடு குறித்தும், அவற்றுக்கு எடை உள்ளதையும் கண்டுபிடித்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த Takaaki Kajita, கனடாவைச் சேர்ந்த Arthur B McDonald ஆகிய இருவருக்கும் இயற்பியல் துறைக்கான Nobel பரிசு அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வேதியியல் துறையில், மனித உடலில் செல்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்தும், மனித உடலில் மூலக்கூறுகள் எவ்வாறு மரபு ரீதியான நோய்களுக்கு காரணமாகின்றன என்பது குறித்தும், புற்றுநோய் உருவாவது மற்றும் உடல் வயோதிகம் அடைவதற்கான காரணங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, புதிய கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்ட ஸ்வீடனைச் சேர்ந்த Tomas Lindahl, அமெரிக்காவின் Paul Modrich, துருக்கியைச் சேர்ந்த அமெரிக்க வாழ் விஞ்ஞானி Aziz Sancar ஆகிய மூவருக்கும் வேதியியல் துறைக்கான Nobel பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00