சிரியாவில் தீவிரமடையும் உள்நாட்டுப் போர் - அதிபர் ஆஸாத் படைகளுக்கு ஆதரவாக வான்வழித் தாக்குதல் நடத்தும் ரஷ்யாவுக்கு ஈராக் ஆதரவு

Oct 8 2015 7:36AM
எழுத்தின் அளவு: அ + அ -

சிரியாவில், அதிபர் ஆஸாத் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யா வான்வழித் தாக்குதல் நடத்துவதற்கு ஈராக் ஆதரவு தெரிவித்துள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவில், சில பகுதிகளை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் வைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் விமானப்படைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில், முக்கிய திருப்பமாக சிரியா அதிபர் ஆஸாத் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யாவும் வான்வழித் தாக்குதல் தொடங்கியுள்ளது. இதற்கு அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடும் பாதிப்புகளை சந்தித்து வரும் ஈராக்கின் பிரதமர் ஹைதர் அல் அபாதி, சிரியா மீது ரஷ்யா வான்வழித் தாக்குதல் நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் பிரச்னையில் அமெரிக்காவைவிட, ரஷ்யா முக்கிய பாத்திரம் ஏற்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00