நேபாள அரசியலில் புதிய திருப்பம் : அரசுடன் பேச்சு நடத்த தயார் என போராட்டக்குழுவினர் அறிவிப்பு

Oct 7 2015 7:44AM
எழுத்தின் அளவு: அ + அ -

நேபாளத்தின் புதிய அரசியல் சாசன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், இப்பிரச்சனைக்கு தீர்வு காண அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டுள்ளனர்.

நேபாளத்தை ஏழு மாகாணங்களாகப் பிரிக்க வகைசெய்யும் புதிய அரசியல் சட்டம், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு தீவிர போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. போராட்டங்களின் போது நிகழ்ந்த வன்முறை சம்பவங்களில் 40க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மாதேசி இனத்தவர்கள் மேற்கொண்டுள்ள பொருளாதார முற்றுகை போராட்டத்தினால், இந்திய எல்லையை யொட்டிய பகுதிகளில் உள்ள சாலைகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்கள் நேபாளத்திற்குள் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக, அந்நாட்டில் அத்யாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இந்த பிரச்சனைக்கு இந்தியாதான் காரணம் என்று நேபாள துணைப் பிரதமர், சில தினங்களுக்கு முன் ஐ.நா.சபையில் தெரிவித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் நேபாள அரசின் இந்த புகாரை, இந்தியா வன்மையாக மறுத்துள்ளது. இந்நிலையில் நேபாள பிரிவினைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

நேபாள அரசுடனான பேச்சுவார்த்தையின் போது, தாங்கள் விதிக்கும் நிபந்தனைகள் ஏற்கப்படாவிட்டால், பேச்சுவார்த்தையை தொடர்ந்து மேற்கொள்ள இயலாது என்றும் போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00