பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரை நடக்க வைத்து அமெரிக்க மருத்துவர்கள் சாதனை - மூளையுடன் கணினியை இணைத்து நடத்தப்பட்ட பரிசோதனை வெற்றி

Sep 24 2015 10:22AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரின் மூளையில் கணினி தொடர்பை ஏற்படுத்தி அவரை நடக்கவைத்து, கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவருக்கு, முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டதில், பக்கவாதத்தால் இரு கால்களும் செயலிழந்தன. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நபர்களை ரோபோட்களின் உதவியுடன் நடக்க வைக்க உலகம் முழுவதும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த இளைஞரை ரோபோட்களின் உதவி இல்லாமல், மூன்றரை மீட்டர் தூரம் நடக்க வைத்து கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர். இது, மருத்துவ உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரின் மூளையின் கட்டளைகளை கணினியுடன் தொடர்புபடுத்தி, கால்களுக்கு நடக்கும் உந்துதலை ஆராய்ச்சியாளர்கள் ஏற்படுத்தினர். இதன் மூலம், ரோபோட்களின் உதவியின்றி, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது கால்கள் மூலம், அமெரிக்க இளைஞர் நடந்தது, அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00