பிரதமர் நவாஸ் ஷெரீஃப்புடன் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு எதிரொலி - பாகிஸ்தானுக்கு ராணுவ உதவி வழங்கப்படுவதில் காலதாமதம் ஏற்படும் என தகவல்

Aug 31 2015 8:44AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்ட நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அவசரப் பயணம் மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

பாகிஸ்தான் மண்ணில் பயிற்சி பெற்று, இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் தடைப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க இந்திய பிரதமரும், பாகிஸ்தான் பிரதமரும் ரஷ்யாவின் ufa மாநாட்டின் போது முடிவு செய்தனர். அதன் அடிப்படையில், இருதரப்பு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் அளவிலான பேச்சுவார்த்தை கடந்த 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பேச்சுவார்த்தைக்காக டெல்லி வரும்போது, காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுடன் பேச்சு நடத்த பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திட்டமிட்டிருந்ததார். இது சிம்லா உடன்பாட்டிற்கு எதிரானது என இந்தியா சுட்டிக்காட்டிய போதிலும், பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிடிவாதம் காட்டவே, இருதரப்பு பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினரின் அத்துமீறியத் தாக்குதல் முன்பு இருந்ததை விட தற்போது அதிகரித்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் பேச்சு ரத்து செய்யப்பட்டதால் எழுந்துள்ள நெருக்கடியான நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ், அவசரப் பயணமாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு வந்தார். அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரிஃப்பை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள், சர்வதேச பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள், இந்திய-பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றம் ஆகியன குறித்து நவாஸ் ஷெரிஃப்புடன் சூசன் ரைஸ் பேச்சு நடத்தினார்.

இதனிடையே, பாகிஸ்தான் மண்ணில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் மற்றும் அவற்றின் தாக்குதல்கள் காரணமாக, அந்நாட்டின் ராணுவ மேம்பாட்டிற்கு அமெரிக்கா அளிக்கவிருந்த 30 கோடி டாலர் நிதியுதவி மேலும் தாமதப்படும் என செய்திகள் வெளியாகி உள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00