மலேஷிய பிரதமர் நஜிப் ரசாக் பதவி விலக வலியுறுத்தி தொடர் போராட்டம்

Aug 29 2015 10:13AM
எழுத்தின் அளவு: அ + அ -

மலேஷியாவின் பிரதமர் நஜிப் ரசாக், நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சியினர், உடனடியாக அவர் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மலேசிய பிரதமர் நஜிப் ரசாக், 2009-ம் ஆண்டு, பொருளாதார வளர்ச்சிக்காக உலகளாவிய பங்குதாரர்களை பெற அரசு நிறுவனம் ஒன்றை தொடங்கினார். இந்த நிறுவனத்தின் சுமார் 700 மில்லியன் டாலர் நிதியை தனது தனிப்பட்ட வங்கி கணக்கில் சட்ட விரோதமாக மாற்றிக்கொண்டு ஊழல் செய்ததாக பிரதமர் நஜீப் ரசாக் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டை பிரதமர் நஜீப் ரசாக் மறுத்து வந்தாலும், இந்த குற்றச்சாட்டு குறித்து பல தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்தன. குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரதமர் நஜிப் ரசாக், பதவி விலக வலியுறுத்தி, எதிர்க்கட்சியினர் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தலைநகர் கோலாலம்பூரில் உள்ள சுதந்திர தின சதுக்கத்தில் தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று, பிரதமருக்கு எதிராக கண்டன கோஷமிட்டு வருகின்றனர். இதனால் மலேஷிய பிரதமருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00