அமெரிக்க அதிபர் தேர்தல் : ஹிலாரி கிளிண்டனுக்கு நன்கொடையாளர்கள் ஆதரவு

Aug 29 2015 8:22AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், ஹிலாரி கிளிண்டனுக்கு நன்கொடையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி அதிபர் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒபாமா, தொடர்ந்து 2-வது முறை அதிபர் பதவி வகித்து வருவதால், அவர் இந்த தேர்தலில் போட்டியிட முடியாது. அவருடைய ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஜனநாயக கட்சி சார்பில் களமிறங்க பலரும் போட்டி போடுகின்றனர். தற்போதைய துணை அதிபர் ஜோ பிடெனும் தேர்தலில் போட்டியிட விரும்புகிறார். ஆனால் அவருக்கு நன்கொடையாளர்கள் மத்தியில் ஆதரவு இல்லை. நன்கொடையாளர்களைப் பொறுத்தமட்டில் அனைவரும் ஓரணியில் திரண்டு வந்து, ஹிலாரி கிளிண்டனையே ஆதரிக்கிறார்கள். கடந்த 2012 தேர்தலில் ஒபாமாவுக்கு மிகப் பெருமளவில் தேர்தல் நிதி வழங்கிய காரின் பிர்க்லேண்ட் இது பற்றி கருத்து தெரிவிக்கையில், தனக்கு ஜோ பிடெனை நன்றாகப் பிடிக்கும் என்றும் ஆனால் தாங்கள் அனைவரும் இப்போது ஹிலாரி கிளிண்டனையே ஆதரிப்பதாக கூறினார். ஒபாமாவுக்கு கடந்த தேர்தலில் 5 லட்சம் டாலர் நிதி திரட்டித் தந்த மற்றொருவரும் இதே கருத்தை பிரதிபலிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00