மொரோக்கோ நாட்டின் மன்னரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி : 2 பேர் சந்தேகத்தின் பேரில் கைது

Aug 29 2015 8:21AM
எழுத்தின் அளவு: அ + அ -

வடக்கு ஆப்பிரிக்காவின் அட்லாண்டிக் பெருங்கடலின் கரையில் அமைந்துள்ள மொரோக்கோ நாட்டின் மன்னரை மிரட்டி, பணம் பறிக்க முயற்சித்ததாக 2 பிரெஞ்சு பத்திரிக்கையாளர்கள் சந்தேகத்தின் பேரில் பாரிஸ் நகரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாரிசில் உள்ள எரிக் லாரன், கேத்தரின் க்ராசியட் இருவரும் மொராக்கோ மன்னர் முகம்மதுவைப்பற்றி புத்தகம் ஒன்று எழுதி வருகின்றனர். இந்நிலையில், பாரிசில் உள்ள மொராக்கோ நாட்டின் அதிகாரிகளைச் சந்தித்துவிட்டு திரும்பும் போது அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்த பணக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பிரெஞ்சு புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, இவர்கள் இருவரும் இந்த புத்தகம் வெளிவந்தால் மன்னர் முகமதுவுக்கு அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும், புத்தகம் வெளிவராமல் இருக்க 3 மில்லியம் யூரோ தர வேண்டும் என்றும் மொராக்கோ அதிகாரிகளை மிரட்டியதாக கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00