தைவானை சேர்ந்த முதியவர் ஒருவர் தன்னுடைய ஒவியங்களால் ஒரு கிராமத்தையே காப்பாற்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்

Aug 29 2015 8:09AM
எழுத்தின் அளவு: அ + அ -

காடுகள், விவசாய நிலங்கள், கிராமங்கள் என அனைத்தும் கட்டிடங்களாக மாற்றப்பட்டு வரும் சூழ்நிலையில், தைவானை சேர்ந்த முதியவர் ஒருவர் தன்னுடைய ஒவியங்களால் ஒரு கிராமத்தையே காப்பாற்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

சுமார் ஆயிரத்து 200 வீடுகளை கொண்ட, அந்த முன்னாள் ராணுவ வீரர்களுக்கான கிராமம் காலப்போக்கில், அங்கு வசித்த மக்களால் கைவிடப்பட்டது. ஒரு கட்டத்தில் வெறும் 12 வீடுகளில் மட்டுமே மனிதர்கள் வசித்தார்கள். இதனால் அரசு, தனியார் நிறுவனங்களும் கிராமத்தை ஆக்கிரமிக்க தயாராகின. ஆனால் அவர்களுக்கு வித்தியாசமான வகையில் ஒரு எதிர்ப்பு வந்தது. ஹுவாங் யுங்-பூ என்ற முதியவர் தனது வீடு, தெருக்களில் ஓவியம் வரைய தொடங்கினார். அது அருகில் இருந்த பல்கலைக்கழக மாணவர்களின் கவனத்தை ஈர்த்தது. அவர்கள் கிராமத்தை காக்கும் போராட்டத்தில் இறங்கினார்கள். அந்த கிராமம் தலைப்புச் செய்தியானது. இன்று இந்த சிறிய கிராமம், ஆண்டுக்கு 10 லட்சம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. ஹுவாங் யுங்-பூ என்ற 93 வயது முன்னாள் ராணுவ வீரர், இன்றும் காலை 3 மணிக்கு எழுந்து, கிராமத்தில் இருக்கும் கைவிடப்பட்ட வீடுகள், சுவர்கள், சாலைகளில் 4 மணிநேரம் ஓவியம் வரைந்து வருகிறார். விரைவில் அந்த கிராமம் கலாச்சார சுற்றுலா தளமாக அறிவிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00