சீனாவில் மூதாட்டிக்கு தலையில் வளர்ந்து வரும் மிகப்பெரிய கொம்பு : வலியால் நிம்மதியான தூக்கம் இல்லாமல் மூதாட்டி தவிப்பு

Aug 29 2015 8:04AM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் மூதாட்டி ஒருவருக்கு தலையில் மிகப்பெரிய கொம்பு வளர்ந்து வருகிறது. தற்போது அந்த கொம்பு ஏற்படுத்தும் வலியால் நிம்மதியான தூக்கம் இல்லாமல் மூதாட்டி தவித்து வருகிறார்.

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் வசித்து வரும் 87 வயதான லியாங் க்சியுஷென் என்பவருக்கு தலையில் திடீரென கொம்பு முளைத்துள்ள காரணம் புரியாமல் மருத்துவர்கள் தவித்து வருகின்றனர். கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இவரது தலையில் சிறிய கருப்பு கட்டி ஒன்று உருவானது. அப்போதைக்கு இந்தக் கட்டியை நாட்டு வைத்தியரிடம் காண்பித்து, லியாங் சரிசெய்து கொண்டுள்ளார். இந்தக் கட்டி இரண்டாண்டுகளுக்கு முன் திடீரென உடைந்தது. இது தலையின் மீது சிறு விரல் அளவிளான கொம்பாக வளர்ந்தது. இதையடுத்து, பயந்துபோன லியாங்கின் மகன் அவரை அருகாமையில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். எனினும், அவரைச் சந்தித்த மருத்துவர்களுக்கு இந்த அதீத வளர்ச்சியின் காரணம் புலப்படவில்லை. இந்த கட்டி குறித்து அறிந்துகொள்ள மகன் ஆர்வமாய் இருந்தாலும், மூதாட்டி மீண்டும் மருத்துவர்களை சந்திக்க பிடிக்காததால் செல்லமறுத்துவிட்டார். சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு தலைமுடியை அலசும்போது எதிர்பாராத விதமாக கொம்பில் இடித்துக் கொண்டதில், அது அசுர வேகத்தில் மீண்டும் வளரத் தொடங்கியது. வெறும் ஆறு மாதங்களில் அது சுமார் 5 அங்குல உயரத்துக்கும், 2 அங்குல அகலத்துக்கும் வளர்ந்துள்ளது. ஆங்காங்கே இது வெடித்து, அதில் ரத்தம், வெளிவரத் தொடங்கியுள்ளது. தற்போது தலையில் இந்தக் கொம்பு ஏற்படுத்தும் வலியால் நிம்மதியான தூக்கத்தையும் லியாங் இழந்துள்ளார். சமீபத்தில் அவரைச் சந்தித்த மருத்துவர்கள் சரும புற்றுநோயல்தான் இப்படி வளருவதாக கூறியுள்ளனர். இதனால், சோகமடைந்த அவரது மகன் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார். இந்தக் கொம்பு நமது உடலின் நகம், முடி வளர்வதற்கான முக்கிய புரோட்டினாக விளங்கும் கேரட்டீனால் ஆனது. நம் உடலின் மீது அதிகமாக சூரிய ஒளி படும் பாகங்களில் இவ்வாறு பாதிப்பு ஏற்படலாம். இங்கிலாந்து நாட்டில் பெரும்பாலானோருக்கு இவ்வகை புற்றுநோய் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00