முதன்முறையாக ஒரே நாளில் 100 கோடி பேர் பேஸ்புக்கில் நுழைந்திருப்பதாக மார்க் ஜூக்கர்பெர்க் தனது பேஸ்புக் பக்கத்தில் தகவல்

Aug 29 2015 7:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதன்முறையாக ஒரே நாளில் 100 கோடி பேர் பேஸ்புக்கில் நுழைந்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதனை மார்க் ஜூக்கர்பெர்க் தனது பேஸ்புக் பக்கத்தில் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

மார்க் ஜூக்கர்பெர்க் தனது நண்பர்களுடன் சேர்ந்து விளையாட்டாக தொடங்கிய பேஸ்புக் இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் செலவே இல்லாமல் தகவல்களை பரிமாறிக் கொள்ளவும், நட்புகளை புதுப்பித்துக் கொள்ளவும் உதவிடும் அரிய சாதனங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. உலகளாவிய அளவில், சுமார் 150 கோடி மக்கள் மாதத்துக்கு ஒருமுறையாவது பேஸ்புக் பக்கத்துக்குள் நுழைவதை வாடிக்கையாக்கிக் கொண்டுள்ளனர். இப்படி, ஒவ்வொரு மாதமும் பேஸ்புக்கை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை கண்காணித்துவரும் பேஸ்புக் நிறுவனம், இதுதொடர்பான தகவல்களை தனது காலாண்டு நிதிநிலை அறிக்கையில் தவறாமல் குறிப்பிட்டு வருகின்றது. அவ்வகையில், கடந்த ஜூன் மாதம் 968 மில்லியன் பயன்பாட்டாளர்கள் பேஸ்புக் பக்கத்துக்குள் நுழைந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தமாத நிலவரப்படி கடந்த திங்கட்கிழமை மட்டும் ஒரு பில்லியன் பேர் அதாவது 100 கோடி மக்கள் பேஸ்புக்கை பயன்படுத்தியதாக மார்க் ஜூக்கர்பெர்க் தனது பேஸ்புக் பக்கத்தில் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். அன்றைய தினம், பூமியில் உள்ள மக்கள் தொகையில் ஏழில் ஒரு பங்கினர் பேஸ்புக் பக்கத்தை பயன்படுத்தியதாக தனது பக்கத்தில் அவர் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00