பெருவில் 200 அழகிகள் பங்கேற்ற பிரமாண்ட ஆடை அலங்கார அணிவகுப்பு - முந்தைய உலக சாதனை முறியடிப்பு

Aug 6 2015 10:37AM
எழுத்தின் அளவு: அ + அ -

பெரு தலைநகர் லிமாவில், தொடர்ந்து 30 மணி நேரம் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு, முந்தைய உலக சாதனையை முறியடித்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

பெரு தலைநகர் லிமாவில், 120 ஆடை அலங்கார நிறுவனங்கள் கலந்து கொண்ட ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரத்து 800 வகையான ஆடைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தொடர்ந்து 30 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆடை அலங்கார அணிவகுப்பு, முந்தைய உலக சாதனையை முறியடித்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு மியாமி கடற்கரையில் 24 மணி 28 விநாடிகள் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியே முந்தைய சாதனையாக இருந்தது. இதனை முறியடிக்கும் வகையில், இந்த புதிய சாதனை நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த சாதனை நிகழ்ச்சியில், 200 மாடல் அழகிகள் பங்கேற்று தங்களது திறனை வெளிப்படுத்தினர். இங்கு வடிவமைக்கப்பட்ட புதிய ஆடைகள் பெருவில் உள்ள 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரங்குகளில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00