துருக்கியில் போலீசாரின் அதிரடி நடவடிக்கையில் தீவிரவாதிகள் கைது - துருக்கி எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு

Jul 28 2015 12:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

துருக்கியின் தலைநகரான Ankara-வில் பதுங்கியிருந்த ஏராளமான ஐ.எஸ் தீவிரவாதிகளையும், குர்து தீவிரவாதிகளையும் போலீசார் கைது செய்தனர். மேலும், ஈராக்கையொட்டியுள்ள துருக்கி எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ஈராக் மற்றும் சிரியாவின் வட பகுதிகளை ஆக்கிரமித்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அண்டைநாடான துருக்கியின் பகுதிகளையும் கைப்பற்ற முயன்று வருகின்றனர். இதற்கு சாதகமாக குர்து தீவிரவாதிகள் செயல்படுகின்றனர். இந்நிலையில் தலைநகர் Ankara-வில் அமைந்துள்ள Haci Bayram மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து 500க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது, ஏராளமான ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் குர்து தீவிரவாதிகள் பிடிபட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனிடையே, ஈராக்கையொட்டி அமைந்துள்ள துருக்கி எல்லைப் பகுதியில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஈராக்கில் செயல்பட்டு வந்த குர்து தீவிரவாதிகள் முகாம்கள் மீது துருக்கி விமானத் தாக்குதல் நடத்தி முகாம்களை அழித்தது. துருக்கியின் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து விவாதிப்பதற்காக செவ்வாய் அன்று சிறப்பு நேட்டோ கூட்டத்திற்கு துருக்கி அழைப்பு விடுத்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00