ஏமனில் நடைபெற்று வரும் உள்நாட்டு சண்டையில் 365 குழந்தைகள் பலி - சவுதி அரேபிய கூட்டுப்படையினர் 5 நாள் போர் நிறுத்தம் அறிவிப்பு

Jul 27 2015 1:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஏமனில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் சவுதி அரேபிய கூட்டுப்படையினர் 5 நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்துள்ளனர். அங்கு நடைபெற்று வரும் உள்நாட்டு போரில், 365 குழந்தைகள் கொல்லப்பட்டதாக UNICEF அமைப்பு தெரிவித்துள்ளது.

ஏமனில், அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் Houthi அமைப்பினரை ஒடுக்க சவுதி அரேபிய கூட்டுப்படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக ஏமன் முழுவதும் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. அங்கிருந்து வெளிநாட்டவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிவிட்டனர். இதுவரை அங்கு நடைபெற்ற தாக்குதலில் 365 குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், 484 குழந்தைகள் காயமடைந்துள்ளதாகவும் UNICEF அமைப்பு தெரிவித்துள்ளது. தாக்குதலில் 248 பள்ளிகள் சேதமடைந்துள்ளன. 270 பள்ளிகளில் ஆக்கிரமிப்பு காரணமாக குழந்தைகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஏற்கனவே வறுமை, பாகுபாடு உள்ளிட்ட காரணங்களால் லட்சக்கணக்கான குழந்தைகள் அங்கு கல்வி கற்காத நிலை ஏற்பட்டுள்ளபோது, தற்போது, மேலும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே, மனிதநேய அடிப்படையில் இன்றிலிருந்து 5 நாட்கள் போர் நிறுத்தம் பிரகடனப்படுத்தப்படுவதாக சவுதி அரேபியா கூட்டுப்படையினர் அறிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00