பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் - ஐ.நா. மனித உரிமை ஆணைய வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது இந்தியா

Jul 4 2015 8:25AM
எழுத்தின் அளவு: அ + அ -

பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் வாக்கெடுப்புக்கு வந்தபோது, இந்தியா அதில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளது.

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நேற்று கண்டன தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்தது. தீர்மானத்திற்கு ஆதரவாக 41 நாடுகள் வாக்களித்தன. தீர்மானத்தை எதிர்த்து அமெரிக்கா ஓட்டளித்தது. இந்தியா, மாசிடோனியா, கென்யா, பராகுவே, எத்தியோப்பியா ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தன. வாக்கெடுப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய பிரதிநிதி திரு.விகாஸ் ஸ்வரூப், பாலஸ்தீனம் குறித்த இந்தியாவின் நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என விளக்கமளித்தார். கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகர் திரு.மோஷியாலோப் டெல்லி வந்து பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00