ஹாங்காங், தாயக சீனாவுடன் இணைந்ததன் 18-வது ஆண்டு தினம் - வண்ணமயமான கொண்டாட்டம்

Jul 1 2015 12:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஹாங்காங், தனது தாயகத்துடன் இணைந்த 18-வது ஆண்டு தினம், அங்கு வண்ணமயமாகக் கொண்டாடப்பட்டது.

"சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியம்" என பெயர் பெற்ற, பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் கீழ் இருந்த ஹாங்காங், கடந்த 1997-ம் ஆண்டு சீன மக்கள் குடியரசில் இணைந்தது. சீனக் குடியரசுடன் இணைந்தாலும், "ஒரு நாடு இரு கொள்கைகள்" என்ற அடிப்படையில் பிரிட்டனின் சட்ட திட்டங்களில் சிறப்பு அம்சங்களை தன்னகத்தே கொண்டு தனித்துவமான தன்னாட்சி அதிகாரங்களுடன் ஹாங்காங் தனது அரசியல் சட்டத்தை நிறுவியுள்ளது. வானுயர்ந்த கட்டடங்கள், அதிவேக பாதைகள், அழகிய மேம்பாலங்கள் என பொருளாதார வளர்ச்சியில் ஹாங்காங் தலைசிறந்து விளங்குகிறது. இந்த நிலையில் ஹாங்காங், சீன குடியரசுடன் இணைந்த 18-வது ஆண்டு தினம் அங்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. ஹாங்காங்கின் தலைவர் Leung Chun-Ying மற்றும் உயரதிகாரிகள் பலர் இந்த கொண்டாட்டங்களில் கலந்து கொண்டனர். கண்ணைக் கவரும் வண்ணமயமான அணிவகுப்பும் நடைபெற்றது. தங்கள் பகுதியை மேலும் முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்வது, சட்டவிரோத குடியேற்றங்களைத் தடுப்பது உள்ளிட்ட திட்டங்களை ஹாங்காங் முனைப்புடன் செயல்படுத்தும் என Leung Chun-Ying தெரிவித்துள்ளார். இதனிடையே, ஹாங்காங்கில் ஜனநாயகம் கோரி ஆயிரக்கணக்கானோர் சீன மற்றும் ஹாங்காங் கொடிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஹாங்காங் அதிபர் Leung Chun-Ying பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00