வானிலை மோசமானதால் ஒருமாத காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சூரிய சக்தி விமானம் - நிலைமை சீரடைந்ததால் ஜப்பானில் இருந்து சவாலான பயணத்தை மீண்டும் தொடங்கியது

Jun 29 2015 12:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

வானிலை காரணமாக ஒரு மாத காலம் ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முதலாவது சூரிய சக்தி விமானம், மீண்டும் ஜப்பானில் இருந்து ஹவாய் தீவை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.

உலகில் முதல் முறையாக சூரிய சக்தி மூலம் இயங்கும் Solar Impulse-2 என பெயரிடப்பட்டுள்ள விமானம், அபுதாபியில் இருந்து புறப்பட்டு இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு ஜப்பானுக்கு சென்றது. ஜப்பானிலிருந்து அமெரிக்காவின் ஹவாய் தீவிற்கு பசிபிக்கடல் வழியாக பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டது. சுமார் ஒரு மாத காலமாக இந்த விமானம் ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

பசிபிக் பெருங்கடல் பகுதியில் வானிலை தற்போது சாதகமாக இருப்பதால், சூரிய சக்தி விமானம், ஜப்பானிலிருந்து ஹவாய் தீவிற்கு தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது. இந்த விமானம் மணிக்கு 30 முதல் 60 கீலோ மீட்டர் வேகத்தில் செல்லும் என்றும், இந்த பயணம் சவாலானதாக இருக்கும் என்றும் விமானிகள் தெரிவித்தனர். இந்த விமானம், மொத்தம் 35 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு உலகை சுற்றிவர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00