ரஷ்யாவில், 25 ஹெலிகாப்டர்கள் வானில் பறந்தபடி நிகழ்த்திய உலக சாதனை நிகழ்ச்சி : பார்வையாளர்கள் பரவசம்

Jun 12 2015 6:55AM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்யாவில் ஒரே நேரத்தில் 25 ஹெலிகாப்டர்கள் வானில் பறந்தபடி டைமன்ட் வடிவத்தை ஏற்படுத்தி பார்வையாளர்களை மகிழ்வித்தன. இதன்மூலம், புதிய உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

உலக சாதனை படைப்பதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் பலரும் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், ரஷ்யாவைச் சேர்ந்த விமானி ஒருவர் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வானில் டைமண்ட் வடிவத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டார். இதனையடுத்து, ரஷ்யாவின் Istra நகரில் இதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 2 பெண் பைலட்டுகள் உட்பட 25 பைலட்டுகள் ஹெலிகாப்டர்களுடன் இந்த சாதனைக்கான முயற்சியில் ஈடுபட்டனர். சிலர் சொந்த ஹெலிகாப்டர்களையும், எஞ்சியவர்கள் அவற்றை வாடகைக்கு எடுத்தும் இந்தசாதனை முயற்சியை மேற்கொண்டனர். அனைத்து ஹெலிகாப்டர்களும், வானில் ஒருசேர பறந்தபடி, டைமண்ட் வடிவத்தை ஏற்படுத்தி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தின. உயிரை துச்சமாக மதித்து இந்த உலக சாதனையைப் புரிந்த பைலட்டுகளை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00