தமிழில் உரையாடிய குடியரசுக் கட்சி வேட்பாளர் விவேக் ராமசாமி : பாலக்காடு தமிழ்தான் வரும் என்று பேசி சிரித்த வீடியோ வைரல்
Sep 26 2023 6:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி, வேலூரைச் சேர்ந்தவரிடம் தமிழில் உரையாடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலுக்காக விவேக் ராமசாமி அமெரிக்கா முழுவதும் பயணித்து ஆதரவை சேகரித்து வருகிறார். அப்போது தமிழக வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் விவேக் ராமசாமியை சந்தித்து உங்களிடம் கேட்க கேள்விகள் எதுவும் இல்லை, ஆனால் நீங்கள் அதிபர் ஆவதற்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். அப்போது தன்னுடைய பெற்றோர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்று கூற, அப்படியா என்று ஆச்சரியத்துடன் கேட்ட விவேக் ராமசாமி, கொஞ்சம் நானும் தமிழ் பேசுவேன், ஆனால் பாலக்காடு தமிழ்தான் வரும் என்று கூறி சிரித்தார்.