லிபியாவில் மேயரின் வீட்டை எரித்தப் போராட்டக்காரர்கள் : வெள்ளம் குறித்து முறையாக அறிவிக்கவில்லை என எதிர்ப்பு
Sep 20 2023 5:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
லிபியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கவில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேயரின் வீட்டை எரித்தனர். வட ஆப்பிரிக்காவில் மத்திய தரைகடல் பகுதியில் உள்ள லிபியாவில் டேனியல் எனும் புயல் தாக்கி அங்குள்ள முக்கிய அணைகள் உடைந்தன. இதன் காரணமாக அந்நாட்டில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை இதுவரை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.இதையடுத்து அதிக அளவு மழை பெய்யும் என்று தெரிந்தும் அதிகாரிகள் தங்களுக்கு போதிய எச்சரிக்கை விடுக்கவில்லை என்று கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் டெர்னாவில் உள்ள அப்துல்மேனம் அல்-கைதியின் வீட்டை எரித்தனர்.