அமெரிக்காவில் பூட்டிய வீட்டிற்குள் தம்பதி மற்றும் இரு குழந்தைகள் சடலமாக மீட்பு : உடல்களை கைப்பற்றி கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை
Sep 20 2023 5:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவின் சிகாகோ நகரில் பூட்டிய வீட்டிற்குள் தம்பதி மற்றும் இரு குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்டனர். ஆல்பர்ட்டோ ரோலன் என்பவர் மனைவி, இரு குழந்தைகள் மற்றும் 3 நாய்களுடன் வசித்து வந்தார். ஒருநாள் முழுவதும் அவர்கள் வீட்டில் இருந்து வெளியே வராததால், அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதனை தொடர்ந்து போலீசார் வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது, துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் தம்பதி, இரு குழந்தைகள் மற்றும் 3 நாய்கள் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனையடுத்து உடல்களை கைப்பற்றிய போலீசார் கொலையா? தற்கொலையா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.