உக்ரைனின் ஆதாரமாக விளங்கிய நோவா ககோவ்கா அணையை ஏவுகணை மூலம் தகர்த்த ரஷ்யா : 80 சதவீத உக்ரேனிய நகரங்களுக்குள் வெள்ளநீர் புகும் அபாயம்

Jun 6 2023 2:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

உக்ரைன் கீவ் நகரில் உள்ள பழமைவாய்ந்த நோவா ககோவ்கா அணையை ஏவுகணை மூலம் ரஷ்யா தகர்த்ததால் நகருக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உக்ரைன்- ரஷ்யா இடையே கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. உக்ரைனின் பல முக்கிய நகரங்களை ரஷ்ய படை கைப்பற்றியுள்ள நிலையில், தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், சோவியத் காலத்தில் கடந்த 1956ம் ஆண்டு கட்டப்பட்ட நோவா ககோவ்கா அணையை ரஷ்யா ஏவுகணை மூலம் தகர்த்துள்ளது.

30 மீட்டர் உயரத்திற்கு மேல் தண்ணீரை தேக்கி வைத்துக்கொள்ளும் வகையில் கட்டப்பட்ட இந்த அணை, ஜபோரிஜியா அணுமின் நிலையத்திற்கும் பெரும் பங்காற்றி வந்தது. உக்ரைனுக்கு ஆதாரமாக விளங்கக்கூடிய இந்த அணையை ரஷ்யா தகர்த்துள்ளதன் மூலம், 80 சதவீத உக்ரேனிய நகரங்களுக்குள் வெள்ளநீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என அஞ்சப்படுகிறது.

ஏற்கெனவே, நோவா ககோவ்கா அணையை தகர்க்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகவும், மேற்கத்திய நாடுகள் உதவும் படியும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரி்க்கை விடுத்திருந்தார். இந்நிலையில், அணை தகர்க்கப்பட்டிருப்பதற்கு உக்ரைனை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00