ரஷ்ய அணு ஆயுதங்கள் பெலாரஸ் நாட்டிலும் நிலைநிறுத்தப்படும் - அதிபர் விளாதிமிர் புதின் அதிரடி அறிவிப்பு

Mar 26 2023 11:28AM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்ய அணு ஆயுதங்கள் பெலாரஸ் நாட்டிலும் நிலைநிறுத்தப்பட உள்ளதாக அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தங்களை மீறாது என்றும் அமெரிக்கா இதுபோல் அவர்களது நட்பு நாட்டில் அணு ஆயுதங்களை நீண்ட காலமாகவே நிலை நிறுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார். பெலாரஸில் அணு ஆயுதங்களுக்கான சேமிப்பு வசதியை ஜூலை 1-ம் தேதிக்குள் ரஷ்யா கட்டி முடித்து விடும் என்றும் அணு ஆயுதங்களை ஏவுவதற்குப் பயன்படும் சிறிய எண்ணிக்கையிலான இஸ்காண்டர் ஏவுகணை அமைப்புகள் ஏற்கனவே பெலாரஸுக்கு மாற்றப்பட்டு விட்டதாகவும் கூறினார். அதே நேரத்தில் ஆயுதங்களை கட்டுப்படுத்தும் பொறுப்பு ரஷ்யாவிடம்தான் இருக்கும் என்றும் புதின் தெரிவித்தார். 1990-க்கு பிறகு நாட்டிற்கு வெளியே அணு ஆயுதங்களை ரஷ்யா நிலைநிறுத்துவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00