பிரிட்டன் மன்னராக மூன்றாம் சார்லசின் முடிசூட்டு விழா - அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் என அறிவிப்பு
Oct 6 2022 3:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரிட்டன் மன்னராக மூன்றாம் சார்லசின் முடிசூட்டு விழா, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரிட்டன் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் தமது 96 ஆம் வயதில் முதுமை காரணமாக சமீபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து, பிரிட்டன் அரச குடும்பத்து வழக்கப்படி, மூன்றாம் சார்லஸ் மன்னரானார். கடந்த மாதம் செப்டம்பர் 10ம் தேதி பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற விழாவில், மன்னராக அறிவிக்கப்படுவதற்கான ஆவணத்தில் மூன்றாம் சார்லஸ் கையெழுத்திட்டார். இதனிடையே, மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.