ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தலைமுடியை கத்தரித்துக்கொண்ட பெண் எம்.பி. - ஈரானிய பெண்களுக்கு ஆதரவாக பேச்சு

Oct 6 2022 7:04AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரானிய பெண்களுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர் ஒருவர் தனது தலைமுடியை கத்தரித்து கொண்டார்.

இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றி வரும் ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அந்நாட்டின் தெஹ்ரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் உயிரிழந்தார். இதை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹிஜாப்பை கழற்றி வீசியும், தீ வைத்து எரித்தும் பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஈரான் நாட்டில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக சுவீடன் எம்.பி. தனது தலைமுடியை ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வெட்டியுள்ளார். நாடாளுமன்ற விவாதத்தின் போது சுவீடன் எம்.பி அபிர் அல் சஹ்லானி, தனது தலைமுடியை கத்தரித்துகொண்டு, ஈரானில் பெண்களுக்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00