உக்ரைன் நாட்டின் 4 மாகாணங்களை மீண்டும் ரஷ்யாவுடன் இணைக்கும் தீர்மானம் : ரஷ்ய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒருமனதாக ஒப்புதல்

Oct 5 2022 11:07AM
எழுத்தின் அளவு: அ + அ -

உக்ரைன் நாட்டின் 4 மாகாணங்களை மீண்டும் ரஷ்யாவுடன் இணைக்கும் தீர்மானத்திற்கு ரஷ்ய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளன.

உக்ரைன் நாட்டின் ஆளுகைக்குட்பட்ட Donetsk, Luhansk, Zaporizhzhia, Kherson ஆகிய நான்கு மாகாணங்களை மீண்டும் ரஷ்யாவுடன் இணைக்க, அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவிட்டார். இதுதொடர்பாக அந்த மாகாணங்களுடன் ரஷ்யா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, உக்ரைனின் நான்கு மாகாணங்களை ரஷ்யாவுடன் இணைக்கும் தீர்மானம், ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான Duma-வில் நேற்று ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, ரஷ்ய நாடாளுமன்றத்தின் மேல்சபையான 'Federation Council'-லில் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. நாடாளுமன்றத்தின் மேலவைத் தலைவர் Valentina Matviyenko, இணைப்புத் தீர்மானம் மீது உறுப்பினர்கள் வாக்களிக்கக் கோரினார். இதனைத்தொடர்ந்து, அனைத்து உறுப்பினர்களும் இணைப்புத் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒரு மனதாக வாக்களித்தனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இணைப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, அதிபர் விளாதிமிர் புதினின் அங்கீகாரத்திற்காக Kremlin மாளிகைக்கு அனுப்பப்படும். அதிபர் கையெழுத்திட்டவுடன், உக்ரைனின் நான்கு மாகாணங்களை ரஷ்யாவுடன் இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00