ஸ்வீடனை சேர்ந்த ஸ்வான்டே பாபோவுக்‍கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு - மனிதப் பரிணாம வளர்ச்சியில் மரபியல் சார்ந்த ஆய்வில் சாதனை படைத்ததற்காக கவுரவம்

Oct 3 2022 4:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்த ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு, ஸ்வீடனை சேர்ந்த ஸ்வான்டே பாபோவுக்‍கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்‍கான நோபல் பரிசுகள், ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் அறிவிக்‍கப்பட்டு வருகின்றன. மருத்துவத்திற்கான நோபல் பரிசு, ஸ்வீடனை சேர்ந்த 67 வயதாகும் ஸ்வான்டே பாபோவிற்கு அறிவிக்‍கப்பட்டுள்ளது. மரபணுக்‍கள் மற்றும் மனிதப் பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்‍காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

மனிதர்களின் அழிந்துபோன மூதாதையர்களான Neanderthal மரபணுவை வரிசைப்படுத்துதல், Denisova என்ற முன்னர் அறியப்படாத ஹோமினினின் ஆகியவற்றை ஸ்வான்டே பாபோ கண்டறிந்துள்ளார். சுமார் 70 ஆயிரம் ஆண்டுகளுக்‍கு முன்பு ஆப்பிரிக்‍காவில் இருந்து இடம்பெயர்ந்ததை தொடர்ந்து, தற்போது அழிந்து வரும் ஹோமினின்களிலிருந்து ஹோமோசேபியன்களுக்‍கு மரபணு பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதையும் ஸ்வாண்டே பாபோ கண்டறிந்துள்ளதாகத் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00