இலங்கையில் தற்போது அமலில் உள்ள அவசர நிலை பிரகடனம் இந்த வார இறுதிக்‍குள் நீக்‍கப்படும் - அதிபர் ரணில் விக்‍ரமசிங்க நம்பிக்‍கை

Aug 17 2022 12:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கையில் தற்போது அமலில் உள்ள அவசர நிலை பிரகடனம் இந்த வார இறுதிக்‍குள் நீக்‍கப்படும் என்று அதிபர் ரணில் விக்‍ரமசிங்க நம்பிக்‍கை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதையடுத்து மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் ராஜபக்சே குடும்பத்தினர் அரசாங்க பதவிகளை ராஜினாமா செய்தனர். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச வெளிநாட்டுக்கு தப்பி சென்றார். இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் தொடர்ந்தன. இதையடுத்து இலங்கையில் அவசர நிலையை பிரகடனப் படுத்துவதாக ரணில் விக்ரமசிங்க அறிவித்தார். இந்த அவசர நிலை பிரகடனம் நாளையுடன் முடிவுக்‍கு வருகிறது.

இந்நிலையில் இலங்கையில் தற்போது அமலில் உள்ள அவசர நிலை பிரகடனம் இந்த வார இறுதிக்‍குள் நீக்‍கப்படும் என்று அதிபர் ரணில் விக்‍ரமசிங்க கூறியுள்ளார். அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டின் நிலைமை நிலையான வகையில் இருப்பதால் அரசுக்கு எதிராக போராட்டங்களை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட அவசரகால சட்டம் நீட்டிக்கப்படமாட்டாது என்றும், மீண்டும் அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00