பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பங்களாதேஷ் தலைநகர் டாக்‍காவில் களைகட்டிய மாட்டு சந்தை - மாடுகளை வாங்க ஆர்வமுடன் குவிந்த பொதுமக்‍கள்

Jul 6 2022 1:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பங்களாதேஷ் தலைநகர் டாக்‍காவில் உள்ள மாட்டுச் சந்தையில், மாடுகளை வாங்க பொதுக்‍கள் குவிந்தனர்.

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை, இஸ்லாமிய நாடுகளில் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையின்போது, கடவுளின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், இஸ்லாமியர்கள் ஏழைகளுக்‍கு இறைச்சியை தானம் அளிப்பர். அந்த வகையில் அண்டை நாடான பங்களாதேஷில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, தலைநகர் டாக்‍காவில் உள்ள மாட்டுச் சந்தையில், மாடுகளின் விற்பனை களைகட்டியது. கால்நடை வியாபாரிகள், தங்கள் கால்நடைகளுடன் படகுகள் மற்றும் டிரக்குகள் மூலம் மாட்டுச் சந்தைக்கு அழைத்து வந்தனர். பொதுமக்‍கள் மாடுகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் விலைக்‍கு மாடுகளை விற்பனை செய்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். பிரமாண்ட இந்த மாட்டுச் சந்தையில், பல கோடி ரூபாய்க்‍கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00