இங்கிலாந்தில் நிதி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்கள் திடீர் ராஜினாமா - துணை கொறடா கிறிஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தை போரிஸ் ஜான்சன் சரிவர கையாளவில்லை என புகார்

Jul 6 2022 10:20AM
எழுத்தின் அளவு: அ + அ -

இங்கிலாந்தில் நிதி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான பழமைவாத கட்சியின் அரசு நடைபெற்று வருகிறது. கட்சியின் துணை கொறடாவாக எம்.பி. கிறிஸ் பின்ஷர் செயல்பட்டு வந்தார். இதனிடையே, கிறிஸ் இரவு நேர கேளிக்கை விடுதியில் இரு ஆண்களிடம் பாலியல் ரீதியில் அநாகரிகமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, கிறிஸ் கட்சியின் துணை கொறடா பதவில் இருந்து ராஜினாமா செய்தார். தொடர்ந்து பழமைவாத கட்சி எம்.பி. பதவியில் இருந்து கிறிஸ் இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால், கிறிஸ் மீது போரிஸ் ஜான்சன் அரசு சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், இங்கிலாந்து நிதி அமைச்சர் ரிஷி சுனக் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். கிறிஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விவகாரத்தை போரிஸ் ஜான்சன் அரசு சரிவர கையாளவில்லை என கூறி அவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00