ஆல்ப்​ஸ் மலையில் பனிச்சரிவில் சிக்‍கியவர்களை தேடும் பணிகள் தீவிரம் : மலையேற்ற வீரர்களை உயிருடன் மீட்க வாய்ப்பில்லை எனத்தகவல்

Jul 5 2022 4:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

இத்தாலி நாட்டின் ஆல்ப்​ஸ் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்‍கியவர்களை உயிருடன் ​மீட்கும் வாய்ப்பு குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தாலி நாட்டின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த குழுவினர் திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கினர். இதில் 7 பேர் ஏற்கெனவே உயிரிழந்ததாக அதிகாரப்புர்வமாக அறிவிக்‍கப்பட்டுள்ளது. மேலும் பத்துக்‍கும் மேற்பட்டவர்களைத் தேடும் பணிகள் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், பனிச்சரிவு ஏற்பட்டு இரண்டு நாட்களுக்‍கும் மேல் ஆகிவிட்டதால், யாரையும் உயிருடன் மீட்கும் வாய்ப்பு இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் முன்கூட்டியே கோடை காலம் தொடங்கி விட்டதால் வழக்‍கத்துக்‍கு மாறாக பனிப் பிரதேசங்களில் விபத்துக்‍கள் அதிகரித்துள்ளதாகவும், இதற்கு பருவநிலை மாற்றமே காரணம் என்றும் கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00