ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பனிப்பாறை சரிந்து விழுந்தது : மலையேற்றத்தில் ஈடுபட்ட 6 பேர் உயிரிழப்பு

Jul 4 2022 3:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

இத்தாலி ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பனிப்பாறை சரிந்து விழுந்ததில் மலையேற்றத்தில் ஈடுபட்ட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஐரோப்பாவில் மிகப்பெரிய மலைத்தொடர்களில் ஒன்றான ஆல்ப்ஸ் மலைத்தொடர் இத்தாலி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 8 நாடுகளில் பரந்து விரிந்துள்ளது. இத்தாலி நாட்டின் வழியாக செல்லும் இந்த மலைத்தொடரில், சுமார் 3 ஆயிரத்து 300 மீட்டர் உயரத்தில் Marmolada என்ற சிகரம் உள்ளது. புன்டா ரோக்கா என்ற பகுதி வழியாக இந்த சிகரத்தை அடைவதற்காக பலர் மலையேற்றத்தில் ஈடுபட்டனர். அப்போது புன்டா ரோக்கா பகுதிக்கு அருகில் பனிப்பாறை சரிந்து விழுந்தது. மலையேற்றத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் அதில் சிக்கினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்‍கப்பட்டனர். ஹெலிகாப்டர்கள் மூலம் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00