பிரபல ஓவியர் பிக்காஸோவின் ஓவியம் ரூ.523 கோடிக்கு ஏலம் - ஓவியத்தை வாங்க போட்டியாளர்கள் ஆர்வம்
May 19 2022 11:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரபல ஓவியர் பிக்காஸோவின் ஓவியம் ஒன்று 523 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
இத்தாலி நாட்டைச் சேர்ந்த பிரபல ஓவியர் பிக்காஸோ, கடந்த 1932ம் ஆண்டு Femme nue couchée என்ற ஓவியத்தை வரைந்தார். இந்த ஓவியத்தை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஏல நிறுவனம் ஒன்று விற்பனை செய்வதாக அறிவித்திருந்தது. இதற்காக நடைபெற்ற ஏல நிகழ்ச்சியில் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் பங்கேற்று ஏலம் கூறினர். தொடக்கத்தில் 57 மில்லியன் அமெரிக்க டாலரில் தொடங்கிய ஏலம் விறுவிறு என அதிகரித்து இறுதியில் 67 புள்ளி ஐந்து மில்லியன் அமெரிக்க டாலரில் முடிவடைந்தது. இறுதியில் இந்த ஓவியம் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 523 கோடியே 23 லட்சத்து 71 ஆயிரத்துக்கு விற்பனையானது.