இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் : 68 எம்.பி.க்களின் ஆதரவு மட்டுமே கிடைத்ததால் தீர்மானம் தோல்வி

May 18 2022 7:39AM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக நடந்த போராட்டம் மற்றும் வன்முறையால் கடந்த 9ம் தேதி மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும், நாட்டை ஆட்டி படைக்கும் உச்சப்பட்ச அதிகாரத்தை கையில் வைத்துள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலகக்கோரி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நாட்டின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்ற பின், முதன் முறையாக நாடாளுமன்றம் நேற்று கூடியது. கூட்டம் தொடங்கியதுமே அதிபர் கோத்தபய மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடந்தது. அதில், தீர்மானத்தை ஆதரித்து 68 எம்பி.க்களும், எதிர்த்து 119 எம்பி.க்களும் வாக்கு அளித்தனர். இதன் மூலம், கோத்தபயவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. அவருடைய பதவிக்கு வந்த ஆபத்து நீங்கியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00