இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் - 68 எம்.பி.க்களின் ஆதரவு மட்டுமே கிடைத்ததால் தீர்மானம் தோல்வி

May 17 2022 3:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் கோத்தபய ராஜபக்‍சேவுக்கு எதிரான நம்பிக்‍கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்தது. இதனிடையே திரிகோணமலை கடற்படை முகாமில் இருந்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்‍ச வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்‍கின்றன.

இலங்கையின் பொருளாதார சீர்குலைவுக்‍கு காரணமான அதிபர் கோத்தபய ராஜபக்‍சே மற்றும் பிரதமர் ​மகிந்த ராஜபக்‍சே ஆகியோர் பதவி விலக கோரி நாடு முழுவதும் ஆயிரக்‍கணக்‍கான மக்‍கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மகிந்த ராஜபக்‍சேவின் சொந்த ஊரில் உள்ள வீடு உள்ளிட்ட அரசியல் கட்சியினரின் குடியிருப்புகளுக்‍கு போராட்டக்‍காரர்கள் தீ வைத்தனர். மக்‍களின் எதிர்ப்பு காரணமாக பதவி விலகிய மகிந்த ராஜபக்‍சே, தனது குடும்பத்தினருடன் கொழும்பில் இருந்து இரவோடு இரவாக திரிகோணமலை கடற்படை முகாமுக்‍கு சென்று தஞ்சமடைந்தார். தற்போது அங்கிருந்து மகிந்த ராஜபக்‍ச வெளியேறி விட்டதாக தெரியவந்துள்ளது. ஆனால் எங்கு சென்றார் என்ற விவரம் தெரியவில்லை.

இதனிடையே, இலங்கையில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதிவேற்றபின் முதல் முறையாக நாடாளுமன்றம் இன்று கூடியது. இதில் அதிபர் கோத்தபய ராஜபக்‍சேவுக்கு எதிராக தமிழ் எம்.பி. சுமந்திரன் கொண்டு வந்த நம்பிக்‍கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்தது. தீர்மானத்துக்‍கு ஆதரவாக 68 எம்.பி.க்‍களும், எதிராக பிரதமர் ரணில் உள்பட 119 பேரும் வாக்‍களித்தனர். முன்னதாக நடைபெற்ற இலங்கை நாடாளுமன்ற துணை சபாநாயகராக அஜித் ராஜபக்சே தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை சபாநாயகர் பதவிக்கு நடந்த தேர்தலில் அஜித் ராஜபக்சே 109 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அஜித் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர் ரோஹிணி 78 ஓட்டுகள் மட்டும் பெற்று தோல்வியடைந்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00