இலங்கையில் பொருளாதார நெருக்கடியை சீரமைக்க 580 கோடி ரூபாய் தேவை என ரணில் விக்ரமசிங்கே பேச்சு - வளர்ச்சித் திட்டங்கள், சலுகைகள் நிறைந்த பட்ஜெட் தயாரிக்கப்படுமெனவும் உறுதி

May 17 2022 11:19AM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கை பொருளாதாரத்தை சீரமைக்‍கும் வகையில் வளர்ச்சித் திட்டங்களை உள்ளடக்கிய புதிய மாற்று பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் திரு. ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இலங்கை தலைநகர் கொழும்புவில், நாட்டின் பொருளாதார நிலை குறித்து நாட்டு மக்‍களிடையே அவர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இலங்கையின் பொருளாதார நிலையை சீர்செய்ய சுமார் 75 மில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படுவதாக குறிப்பிட்டார். நடப்பு ஆண்டுக்கான புதிய பட்ஜெட் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் பல்வேறு சலுகைகளை உள்ளடக்கியதாக தயாரிக்கப்படும் என அவர் தெரிவித்தார். 2020-2021-ம் நிதியாண்டில் இலங்கை ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 37 ஆயிரத்து 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால், அதனை தனியார் மயமாக்க திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். தாம் பிரதமராக பொறுப்பேற்றது கத்தியின் மேல் நடப்பதைவிட பயங்கரமான சவாலாக ​விளங்குவதாகத் தெரிவித்தார். கையிருப்பில் ஒரு நாளைக்குத் தேவையான பெட்ரோல் மட்டுமே உள்ளதாக அவர் சுட்டிக்‍காட்டினார். இந்திய கடன் உதவியின் கீழ் மே 19, ஜூன் 1 ஆகிய தேதிகளில் 2 டீசல் கப்பல்களும், மே 18, மே 29 ஆகிய தேதிகளில் 2 பெட்ரோல் கப்பல்களும் வர இருப்பதாக இலங்கை பிரதமர் ரணில் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00