ஐக்‍கிய அரபு அமீரக அதிபர் ஷேக்‍ கலிஃபா பின் ஜாயத் அல் நஹ்யான் காலமானார் - 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுமென அறிவிப்பு

May 13 2022 5:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐக்‍கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக்‍ கலிஃபா பின் ஜாயத் அல் நஹ்யான் காலமானார். அவருக்‍கு வயது 73.

அதிபர் ஷேக்‍ கலிஃபா பின் ஜாயத் அல் நஹ்யான் உயிரிழந்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் நாற்பது நாட்கள் துக்‍கம் கடைபிடிக்‍கப்படும் என்றும் இக்‍காலகட்டத்தில் கொடிகள் அரை கம்பத்தில் பறக்‍கவிடப்படும் என்றும் அதிபரின் நடவடிக்‍கைகளைக்‍ கவனிக்‍கும் அமைச்சகம் அறிவித்துள்ளது. இதே போல் அடுத்த மூன்று நாட்களுக்‍கு அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்படாது என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஐக்‍கிய அரபு அமீரகத்தைத் தோற்றுவித்த Zayed bin Sultan Al Nahyan-ன் மூத்த மகனான கலீஃபா, அமீரகத்தின் 16வது அதிபராகப் பதவி வகித்து வந்தார். கடந்த 2014ம் ஆண்டில் பக்‍கவாத பாதிப்பு ஏற்பட்டதில் தொடங்கி உயிரிழக்‍கும் வரை பல்வேறு உடல் உபாதைகளால் அவருக்‍கு பாதிப்புக்‍கள் தொடர்ந்தன. இந்நிலையில், தற்போது அவர் தமது 73வது வயதில் காலமானதாக அறிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00