மீண்டும், மீண்டும் ஏவுகணை சோதனை செய்யும் வடகொரியா : அமைதி பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக அமையும் என நிபுணர்கள் கருத்து

Oct 19 2021 1:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

வடகொரியா அடுத்தடுத்து 2 புதிய ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாகவும், வட கொரியாவின் இந்த சோதனைகளை கூர்ந்து கவனித்து வருவதாகவும் தென்கொரியா தெரிவித்துள்ளது.

கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் இருந்து வரும் நிலையில், வடகொரியாவை தென்கொரியா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தது. அதேநேரம், வடகொரியா புதிதாக 2 புதிய ஏவுகணைகளை சோதித்துள்ளது. இந்த சோதனைகள் அமைதி பேச்சுவார்ததைக்‍கு முட்டுக்கட்டையாக அமையும் என்று சர்வதேச அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வட கொரியாவிடம் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்தவாறு ஏவுகணையை ஏவும் வசதி உள்ளதாகவும், வட கொரியா அதனைப் பயன்படுத்தி தற்போது 2 ஏவுகணைகளை பரிசோதித்துள்ளதாகவும், வடகொரியாவின் இந்த நடவடிக்‍கையை, அமெரிக்காவுடன் இணைந்து தாங்கள் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், தென்கொரிய கூட்டுப்படைகளின் தலைவர் கூறியுள்ளார். வட கொரியா அண்மை காலமாகவே அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை செய்து வருவதாகவும், இது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிப்பதாகவும் ஜப்பான் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00