விண்வெளியில் ஆய்வு மையம் அமைக்கும் பணியில் சீனா தீவிரம் - 2-ம் கட்டப்பணிகளை மேற்கொள்ள 3 வீரர்கள் விண்வெளிக்‍கு பயணம்

Oct 16 2021 11:25AM
எழுத்தின் அளவு: அ + அ -

விண்வெளியில் ஆய்வு மைய கட்டமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக பெண் உட்பட 3 விண்வெளி வீரர்களை, விண்வெளிக்கு சீனா அனுப்பி வைத்துள்ளது.

சீனா விண்வெளியில் தனக்கென புதிதாக ஒரு விண்வெளி ஆய்வு மையத்தை கட்டமைத்து வருகிறது. 2022-ம் ஆண்டுக்குள் இந்த விண்வெளி ஆய்வு மையத்தை முழுமையாக கட்டமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சீனா திட்டமிட்டுள்ளது. 'தியான்ஹே' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி ஆய்வு மையத்துக்கான மைய பகுதி கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து 'தியான்ஹே' விண்வெளி ஆய்வு மையத்தை கட்டமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக கடந்த ஜூன் மாதம் 3 வீரர்களை அனுப்பி வைத்தது. அவர்கள் 90 நாட்கள் பணிக்‍குப் பின்னர் பூமிக்‍கு திரும்பினர்.

இந்நிலையில், அடுத்தக்‍கட்டப் பணிக்‍காக மீண்டும் 3 விண்வெளி வீரர்களை சீனா அனுப்பி வைத்துள்ளது. Jiuquan Satellite Launch Center ஏவுதளத்தில் இருந்து 'Shenzhou-13' என்ற விண்கலம், Long March-2F Y-13 ராக்‍கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. அடுத்த 6 மாதங்களுக்‍கு விண்வெளியில் மூன்று வீரர்களும் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுவார்கள் என அந்நாட்டு விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ராணுவ வீரர்களின் அணிவகுப்புடன் விண்வெளி வீரர்கள் விண்வெளிக்‍கு அனுப்பி வைக்‍கப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00